அவல் உப்புமா

இலகுவாக செய்யக்கூடிய காலை உணவு ஒன்று சொல்கிறேன். குழந்தைகள்முதல் பெரியவங்கவரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடி உணவு இது. செய்து பார்த்து எப்படி இருந்தது என சொல்லுங்கோ.

அவல் உப்புமா

அவல் – 3 கப்
உருளைக் கிழங்கு, காரட், முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ரகோலி, காப்ஸிகம், எது எல்லாம் வீட்டில் இருக்கிறதோ
அவற்றிலிருந்து கலந்து 2 கப்  சிறிதாக நறுக்கி
வைத்துக்கொள்ளவும்.
காரத்திற்கு ஏற்ப 2-3 பச்சை மிளகாய் நறுக்கியது
எண்ணெய் – 2 – 3 டேபிள் ஸ்பூன்

தாளிக்க
கடுகு 1/2 ரீ ஸ்பூன்
வெங்காயம் நடுதர அளவு 1 – சிறிதாக நறுக்கியது
உளுத்தம்பருப்பு 1 ரீ ஸ்பூன்,
கடலை பருப்பு  1 ரீ ஸ்பூன்,
கறிவேப்பிலை  சிறிதளவு

உப்பு – தேவைக்கு ஏற்ப
மஞ்சள் பொடி – சிறிதளவு
நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி தழை
எலுமிச்சம் பழம் 1/2

செய்முறை:
முதலில் அவலை நீரில் 5 – 6 நிமிடம்வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அவலை தண்ணீர் வடியவிட்டு சிறிது உப்பு சேர்த்துக் கலந்து விடவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பதற்கு எடுத்துவைத்த பொருட்களை தாளித்து, நறுக்கிவைத்த காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயும் சேர்க்கவும்.
தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும். விரும்பினால் சிறிதளவு பெருங்காயம் சேர்க்கலாம்..
காய் நன்றாக வதங்கியவுடன், ஊற வைத்து வடிக்கட்டிய அவலைச் சேர்த்துக் மென்மையாக கிளறிவிடவும்.  சூடேறியதும் எலுமிச்சை சாறை சேர்த்க்டு லேசாக கிளறி, இறக்கி நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *