கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்

கத்திரிக்காய் முருங்கைக்காய் பச்சைப்பட்டாணி பொரியல்

 

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 1,சிறிய கத்திரிக்காய் – 4 – 5
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2 -சிறு துண்டுகளாக நறுக்கியது
தக்காளி – 2
தேங்காய் துருவல் – 3 ரீஸ்பூன்,
கடுகு – அரை ரீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/4 ரீஸ்பூன்
மஞ்சள்தூள் , 1/4 ரீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயத்தை சின்னதாக நறுக்கவும்
கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை அளவான துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும். நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு சூடுபட வதங்கி வரும்போது தக்காளி துண்டுகள், கால் கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றி காய்கள் வெந்ததும் தேங்காய் துருவல் தூவி கலந்து சூட்டுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *