காளான் கறி Mushroom curry

காளான் கறி Mushroom curry

 

 ஹாய் ப்ரண்ட்ஸ்,
நான் இன்று சுவையான காளான் கறி ரெசிபியுடன் வந்திருக்கேன். நீங்களும் செய்து பார்க்கலாம்.
சாதத்துடன் பரிமாற இந்த காளான் கறி சுவைமிகுந்த சைட் டிஸ் ஆகும்.

 

காளான் கறி

 

தேவையான பொருட்கள்

 

காளான் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
தனியா தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – கால் தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப

 

செய்முறை:

 

காளானை நன்றாக கழுவிச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் வதங்கியதும், சுத்தப்படுத்தி நறுக்கிய காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

 

அதன் பின்னர் தக்காளி சேர்க்கவும்.

 

தக்காளி நன்கு வெந்ததும், மேலும் சிறிது உப்பு, தனியா தூள் சேர்த்து நன்றாக காளானுடன் சேரும் வரை மெல்லிய தீயில் வைத்து கிளறவும்.

 

DSC_0051

 

 

 

பிறகு விரும்பினால் சிறிது தேங்காய்ப்பாலும் சேர்த்து கடாயை மூடி வேக விடவும்.

 

காளான் வெந்ததும் உப்பு, காரம் சரிப்பார்த்து, சற்று சுண்ட வைத்து, அடுப்பை அணைத்து விடவும். விரும்பினால், நன்கு நீர் வற்றும் வரை கிளறி, பொரியலாகவும் பரிமாறலாம்.

 

அவ்வளவுதான் சுவையான காளான் கறி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *