சுவையான சாம்பார்

சாம்பார்இட்லி, ஊத்தப்பம், தோசை, மசாலா தோசை, வடை அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள ருசியான சாம்பார் செய்வது எப்படியென்று சொல்கிறேன். செய்து பார்த்துவிட்டு சுவை எப்படி இருந்தது என நீங்களே கூறுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 100 கிராம் வேக வைத்தது
புளி சிறிதளவு
காரட், கிழங்கு, முருங்கைக்காய், கத்திரிக்காய், பரங்கிக்காய், தக்காளி போன்றவை
வெங்காயம்- 1 நடுத்தர அளவு
மிளகாய்- 2
கடுகு௧ டீஸ்பூன்
ஜீரகம்- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
தனியா- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்- 4 – 5
வெந்தயம்- 1/2 ஸ்பூன்
பெருங்காயம்- சிறிதளவு

காய்கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வறுக்க வேண்டிய பொருட்களை பொன்னிறமாக
வறுத்துப்பொடி செய்யவும்.
சிறிதளவு எண்ணையை வாணலியில் சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு ,
துண்டுகளாக்கிய சிவப்பு மிளகாய், ஜீரகம், கறிவேப்பிலையை சேர்த்து , சின்ன
வெங்காயத்தையும் வதக்கியபின் தக்காளியையும் சேர்த்து வதக்கி, காய்கறிகளையும்
சிறிதளவு மஞ்சள் பொடி, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.காய்கறிகளும் ஓரளவு வதங்கியதும் வேக வைத்த
பாசிப்பருப்பையும் கரைத்த புளியையும் சேர்த்து புளி வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
இறுதியாக அரைத்த பொடியைப்போட்டு நன்றாக கலக்கி கொதிக்க விடவும். சாம்பார் கெட்டியாக வரும்போது,
வெல்லம் சேர்த்து சிறிது கோதிக்கவிட்டு  பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை சாம்பாரில் தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *