செட்டிநாடு தக்காளி சட்னி

செட்டிநாடு தக்காளி சட்னி

 


இட்லி, தோசை வகைகள் ஆகியவற்றுக்கு ருசியான காம்பினேசன் இந்த செட்டிநாடு தக்காளி சட்னி.

தேவையான பொருட்கள் :
தக்காளி 3
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 3
சிறிதளவு கொத்தமல்லி இலை
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு துருவிய தேங்காய்ப்பூ
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உளுந்து 2 ரீஸ்பூன்
கடலை பருப்பு 2 ரீஸ்பூன்
தேவையான அளவு உப்பு

செய்முறை :

தக்காளி & வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து,கடலை பருப்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அவை ஓரளவு வதங்கியதும் தேங்காயையும் போட்டு மேலும் சிறிது வதக்க்கி இறக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது அருவல்நறுவலாக அரைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு தக்காளி சட்னி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *